வெண்பலகை, ஸ்லைடு அல்லது ஆவணத்தை விரைவாகப் படம்பிடிக்கலாம். படிக்க எளிதானதாக OneNote அதை செதுக்கி, மேம்படுத்தும். தட்டச்சுச் செய்த உரையையும் உள்ளெடுத்துக் கொள்வதால், அதனைப் பின்னர் தேடிக் கொள்ளலாம்.
ஒரு ஸ்டைலஸைப் பயன்படுத்து பலகையிலிருந்து ஒரு வரைபடத்தை வரையவும். தட்டச்சுச் செய்வதை விட உங்கள் கையால் எழுதுவது அதிக இயல்பாக இருப்பதாகக் கண்டால், உங்கள் குறிப்புகள் அனைத்தையும் எழுதவும்.
விரிவுரையின் ஒவ்வொரு சொல்லையும் எழுத வேண்டாம்-முக்கியமான பகுதிகளை மட்டும் எழுதினால் போதும். உங்கள் குறிப்புகளை OneNote ஆனது ஆடியோவுடன் இணைக்கிறது, ஆகவே நீங்கள் ஒவ்வொரு குறிப்பையும் எடுத்த போது என்ன பேசப்பட்டது என்பதற்கு உடனே தாவிச் செல்லலாம்.
உரை, செய்ய வேண்டியவை பட்டியல்கள் மற்றும் அட்டவணைகளை வேகமாகவும் எளிமையாகக் கையாளக் கூடியதாக OneNote வடிவமைக்கப்பட்டுள்ளது. தளவமைப்புகள் பற்றிய கவலையே வேண்டாம், நீங்கள் விரும்பும் பக்கத்தில் எந்த இடத்திலும் தட்டச்சுச் செய்யவும்.
அவர்களது மின்னஞ்சல் உங்களிடம் இருந்தால், அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். தொடங்குவதற்கு எளிதாகனதும் வேகமானதும் ஆகும்.
நீங்கள் ஒரே அறையில் அல்லது வளாகத்தில் எங்கேனும் இருந்தாலும், நிகழ் நேரத்தில் ஒன்றாகப் பணியாற்றலாம். எதில் யார் பணியாற்றுகிறார்கள் என்பதை திருத்துதல் குறிகள் உங்களுக்குக் கூறும்.
வகுப்பில், உங்கள் அறையில், கணினி ஆய்வகத்தில் அல்லது ஒரு காஃபிக் கடையில்-எந்தவொரு சாதனத்திலும் எங்கிருந்தும் நீங்கள் ஒன்றாகப் பணியாற்றலாம். யாரேனும் ஆஃப்லைன் சென்றால் கூட, OneNote ஆனது உங்களுக்காக இவை அனைத்தையும் ஒன்றாக வைத்திருக்க ஒத்திசைக்கிறது.
பெரும்பாலான பணித்திட்டங்களுக்கு வலை ஆராய்ச்சி தேவைப்படுகின்றன. ஒற்றைக் கிளிக்கில் எந்தவொரு உலாவியிலும் உள்ள வலைப் பக்கத்தையும் படம்பிடிக்கலாம். அப்பக்கத்தை OneNote-இல் விவரிக்கலாம்.
விரிவுரை ஸ்லைடுகளையும் தாள்களையும் உங்கள் குறிப்புகளுடன் வைத்திருக்கலாம். தட்டச்சு செய்து அல்லது ஒரு ஸ்டைலஸைப் பயன்படுத்தி கையால் எழுதி மேல் பகுதியில் அல்லது அவற்றுக்கு அருகிலே குறிப்புகளை எடுக்கலாம்.
புகைப்படங்கள் அல்லது அச்சுப்பிரதிகளின் மேலே எழுதவும். உங்கள் எண்ணங்களை அர்த்தப்படுத்த ஒட்டக்கூடிய குறிப்புகளைப் பயன்படுத்தி ஒழுங்குபடுத்தவும். ஓரங்களில் எளிதாக எழுதுவதன் மூலம் கருத்திடவும்.
கோப்புகள் வைக்கும் கோப்புறையோ அல்லது அடுக்கி வைக்கப்பட்ட கோப்புகளோ? OneNote இரண்டையும் விரும்புகிறது. குறிப்பேடுகள் மற்றும் பிரிவுகளை உருவாக்கி உங்கள் குறிப்புகளையும் பணித்திட்டங்களையும் ஒழுங்குபடுத்தி வைத்திருக்கவும். நீங்கள் தட்டச்சு செய்த, கிளிப் செய்த அல்லது கையால் எழுதிய உரை எதையும் எளிதாகத் தேடிக், கண்டுபிடிக்கவும்.