சிறந்த பயன்பாடுகள்
இப்பயன்பாடுகள் மற்றும் சாதனங்களுடன் OneNote -இன் அதிக பயனைப் பெறுக.
Brother Web Connection
Brothe மெஷினால் (MFP/ஆவண ஸ்கேனர்), படங்களை ஸ்கேன் செய்து, PC வழியாக அல்லாமல், OneNote மற்றும் OneDrive -க்கு நேரடியாக பதிவேற்றம் செய்ய முடியும்.
Chegg
Chegg Study Q&A-இல் உள்ள தங்கள் முக்கியமான வீட்டுப்பாட பதில்களை மாணவர்கள் OneNote-இல் சேமிக்கலாம். OneNote-இல் உள்ள "இதைக் கிளிப் செய்யவும்" பொத்தான் மூலம் இதைச் சுலபமாகச் செய்யலாம். அங்கிருந்து, உங்கள் பதில்களை பாடம் வாரியாக, வகுப்பு வாரியாக அல்லது வீட்டுப்பாடம் வாரியாக ஒழுங்கமைத்து, OneNote-இல் உடனடியாகத் தேடிக் கண்டுபிடிக்குமாறு அமைக்கலாம். சிறப்பான பாட வழிகாட்டியை உருவாக்கி, உங்களுடன் படிக்கும் சக மாணவர்களுடன் பகிரவும்.
cloudHQ
cloudHQ உடன் உங்கள் OneNote குறிப்புகளை ஒருங்கிணைக்கவும். Salesforce, Evernote, Dropbox போன்ற பிற கிளவுட் சேவைகளுடன் உங்கள் குறிப்பேடுகளை ஒத்திசைக்கலாம். எளிமையாக மற்றவர்களுடன் கூட்டுப்பணியாற்றலாம், உங்கள் யோசனைகளை எந்தப் பயன்பாட்டிலும் பகிரலாம் மற்றும் தானாக மீண்டும் அதை OneNote இல் ஒத்திசைக்கலாம். ஒருவேளை உங்கள் யோசனைகளை எதிர்பாராமல் நீக்கிவிட்டீர்கள் எனில், அவற்றைப் பாதுகாக்க உங்கள் OneNote குறிப்பேடுகளை பிற கிளவுட் சேவைகளிலும் காப்புப்பிரதி எடுக்கலாம்.
Newton
Newton பயன்படுத்தி ஒரே கிளிக் மூலம் OneNote-இல் முக்கியமான மின்னஞ்சல்களைச் சேமிக்கவும். இன்வாய்ஸ், ரெசிபி அல்லது முக்கியமான வாடிக்கையாளர் மின்னஞ்சல் என எதுவாக இருந்தாலும், எல்லாவற்றையும் ஒன்றாக வைத்துக்கொள்ள Newton-இன் OneNote ஒருங்கிணைப்பைப் பயன்படுத்தவும்.
Docs.com
Docs.com ஆனது OneNote குறிப்பேடுகள் வழியாக குறிப்புகளைப் பரப்ப அல்லது தகவல்களை அறிந்துகொள்ள பயனர்களை அனுமதிக்கிறது. இது உலகம் முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் போன்றவர்கள் உங்கள் OneNote குறிப்பேட்டைப் பார்க்கவும் மீண்டும் பயன்படுத்தவும் அனுமதிக்கிறது, எனவே சமூகத்தில் பிரபலத்தையும் செல்வாக்கையும் அதிகரிக்கிறது.
Doxie Mobile Scanners
Doxie என்பது புதிய வகை பேப்பர் ஸ்கேனராகும், இது ரீசார்ஜ் செய்யக்கூடியது. ஆகவே நீங்கள் எங்கிருந்தும் உங்கள் ஆவணங்களை ஸ்கேன் செய்துகொள்ள முடியும், அதற்கு கணினி தேவையில்லை. நீங்கள் எங்கிருந்தாலும், இதை சார்ஜ் செய்யுங்கள், ஆன் செய்யுங்கள், பிறகு ஸ்கேன் செய்யவதற்கு உங்கள் பேப்பர், ரசீதுகள், புகைப்படங்களை உள்ளே செலுத்துங்கள், காப்பகப்படுத்துங்கள், பகிருங்கள். Doxie எங்கிருந்தாலும் ஸ்கேன் செய்கிறது, பிறகு உங்கள் சாதனங்கள் அனைத்திலும் உள்ள ஸ்கேன் செய்த உங்கள் ஆவணங்கள் அனைத்திற்குமான அணுகலுக்காக OneNote உடன் ஒத்திசைக்கிறது
EDUonGo
EDUonGo யார் வேண்டுமானாலும் ஆன்லைன் அகாடமி அல்லது பாடத்தை நிமிடங்களில் தொடங்க அனுமதிக்கிறது. EDUonGo மாணவர்கள் எளிமையாக பாடங்களை அவர்களது சொந்த குறிப்பேடுகளில் ஏற்றுமதி செய்யலாம். இது எளிமையாக குறிப்புகளை எடுப்பதற்கும், மற்றவர்களுடன் அதைப் பகிர்வதற்கும் மாணவர்களுக்கு உதவுகிறது. மாணவர்கள் அவர்கள் OneDrive கணக்குகளுடனும் இணையலாம். ஆசிரயர்களாக நீங்கள், உங்கள் பாடங்களில் Office Mix இலிருந்து வீடியோக்களை சேர்க்கலாம்.
OneNote க்கு மின்னஞ்சல் செய்
நீங்கள் பயணத்தில் இருக்கையில், உங்களுக்கு முக்கியமான தகவல் எதனையும் நேரடியாக உங்கள் குறிப்பேட்டுக்கு மின்னஞ்சல் செய்வதன் மூலம் அவற்றைப் பதிவு செய்யுங்கள்! ஆவணங்கள், குறிப்புகள், பயணத் திட்டங்கள் மற்றும் பற்பலவற்றை me@onenote.com -க்கு அனுப்புங்கள். அவற்றை நாங்கள் உங்கள் OneNote -இல் இடுவோம், உங்கள் சாதனங்கள் அனைத்திலிருந்தும் நீங்கள் அவற்றை அணுகலாம்.
Epson Document Capture Pro
Document Capture Pro ஆனது ஆவணங்களை எளிதாக ஸ்கேன் செய்ய, பக்கங்களைத் திருத்த, கோப்புகளைச் சேமிக்க மற்றும் தரவை Workforce® DS-30, DS-510, DS-560 மற்றும் பிற போன்ற Epson ஸ்கேனர்களைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்த பயன்பாடுகளுக்கு அனுப்ப உதவுகிறது. அதுமட்டுமல்ல, பயனர்கள் பல சாதனங்களிலிருந்து ஆவணங்களை எளிதாக அணுகுவதற்கு அல்லது மற்றவர்களுடன் பகிர்வதற்கு, ஒரே தொடுகையில் OneNote -க்கு ஸ்கேன் செய்யவும் முடியும்.
eQuil Smartpen2 & Smartmarker
உங்கள் குறிப்புகளை எந்த பரப்பிலும் எழுதலாம் மற்றும் eQuil Smartpen2 மற்றும் Smartmarker உடன் அதை ஸ்மார்ட் பரப்பாக மாற்றுவதன் மூலம் OneNote-க்கு அனுப்பலாம். இது உங்கள் சிறந்த சிந்தனைகளை பிடிப்பதற்கான இயற்கையான வழியாகும்.
Feedly
Feedly வாசகர்களையும் அவர்களுக்குப் பிடித்த கதைகள் மற்றும் தகவல்களையும் இணைக்கிறது. feedly -ஐப் பயன்படுத்தி சிறந்த உள்ளடக்கங்களைக் கண்டறிந்து, ஒரே கிளிக் மூலம் அவற்றில் சிறந்த கட்டுரைகளை நேரடியாக OneNote -இல் சேமித்துக்கொள்ளுங்கள்.
FiftyThree இன் பேப்பர் மற்றும் பென்சில்
பென்சிலிலிருந்து பேப்பர் வரை உங்கள் யோசனைகளை கொண்டுசென்று, இன்னும் ஒரு படிமேலே OneNote-க்கு கொண்டு செல்லவும். மேம்படுத்தப்பட்ட துல்லியமான மற்றும் எளிமையான பென்சில் மூலம் எழுதுங்கள் மற்றும் வரையுங்கள், ஏதேனும் தவறானால், இயற்கையான வகையில் அழியுங்கள் - இவை அனைத்தும் நேரடியாக OneNote இலிருந்தே. எளிமையாக குறிப்புகள் எடுக்கலாம், செக்லிஸ்ட் தயாரிக்கலாம் மற்றும் பேப்பரில் வரைந்து மேலும் பகிர்ந்த குறிப்பேட்டில் ஒன்றாக வேலை செய்ய, ஆடியோ பதிவுகளை சேர்க்க மற்றும் எந்த சாதனத்திலிருந்தும் உங்கள் உள்ளடக்கத்தை அணுகுதல் போன்ற பலவற்றை செய்வதற்காக, OneNote-இல் அதைப் பகிரலாம்.
Genius Scan
Genius Scan என்பது உங்கள் பாக்கெட்டிலுள்ள ஒரு ஸ்கேனர். இது பேப்பர் ஆவணங்களை டிஜிட்டலாக்க, PDF கோப்புகளை உருவாக்கி அவற்றை உடனடியாக OneNote -இல் சேமிக்க உதவுகிறது.
JotNot Scanner
JotNot ஆனது உங்கள் iPhone -ஐ கையடக்க பலபக்க ஸ்கேனராக மாற்றுகிறது. ஆவணங்கள், ரசீதுகள், வெண்பலகைகள், வியாபார அட்டைகள், குறிப்புகள் போன்றவற்றை ஒரு மின்னணு வடிவத்தில் ஸ்கேன் செய்வதற்கு JotNot -ஐப் பயன்படுத்தலாம். JotNot இப்போது Microsoft -இன் OneNote பணித்தளத்துடன் நேரடியான ஒருங்கிணைவை வழங்குகிறது, ஆகவே நீங்கள் OneNote கணக்கைப் பயன்படுத்தி உங்கள் ஸ்கேன்களை விரைவாகவும் எளிதாகவும் மறுபிரதி எடுக்கலாம் மற்றும் ஒழுங்குபடுத்தலாம்.
Livescribe 3 Smartpen
Livescribe 3 smartpen மற்றும் Livescribe+ பயன்பாட்டைக் கொண்டு, நீங்கள் தாளில் எழுதும் அனைத்தும் உடனடியாக உங்கள் மொபைல் சாதனத்தில் காண்பிக்கப்படும், அதில் நீங்கள் உங்கள் குறிப்புகளுக்குக் குறிச்சொல் இடலாம், தேடலாம் மற்றும் அவற்றை உரையாக மாற்றலாம். நீங்கள் அனைத்தையும் OneNote -க்கு அனுப்ப முடியும், இதனால் நீங்கள் கையில் எழுதிய குறிப்புகள் மற்றும் வரைந்த படங்கள் ஆகியவை உங்கள் மற்ற முக்கியமான தகவலுடன் ஒருங்கிணைக்கப்படும்.
Mod Notebooks
Mod என்பது ஒரு பேப்பர் குறிப்பேடு, இதை கிளவுடிலிருந்து அணுகலாம். பரிட்சயமானபேனா மற்றும் பேப்பரிலிருந்து குறிப்புகளை எடுங்கள், பிறகு உங்கள் பக்கங்களை இலவசமாக டிஜிட்டல் வடிவமைப்புக்கு மாற்றுங்கள். முடிக்கப்பட்ட குறிப்பேட்டின் ஒவ்வொரு பக்கத்தையும் OneNote -க்கு ஒத்திசைத்து நிரந்தரமாக சேமிக்க முடியும்.
NeatConnect
NeatConnect பேப்பர் தொகுப்புகளை டிஜிட்டல் ஆவணங்களாக மாற்றி, கணினி இல்லாமலே அவற்றை நேரடியாக OneNote க்கு அனுப்புகிறது. NeatConnect இன் Wi-Fi இணக்கத்தன்மையும் தொடுதிரையும் சேர்ந்து, உங்கள் வீட்டின் எந்த அறையில் இருந்தும் அல்லது அலுவலகத்தில் எந்த மூலையில் இருந்தும் OneNote க்கு ஸ்கேன் செய்யும் செயலை வேகமாகவும் எளிதாகவும் மாற்றுகிறது, இதனால் நீங்கள் நேரத்தை சேமித்து ஒழுங்கமைவு மற்றும் உற்பத்தித் திறனின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும்.
News360
News360 என்பது இலவச தன்மயப்படுத்திய செய்திகள் பயன்பாடு, இது உங்களுக்கு என்ன பிடிக்கிறது என்பதை அறிந்துகொள்ளும், நீங்கள் இதைப் பயன்படுத்த பயன்படுத்த அது மேலும் புத்திசாலித்தனமாக மாறும். 100,000+ க்கும் அதிகமான மூலங்கள் இருப்பதால், படிக்க சுவாரசியமாக ஏதேனும் எப்போதுமே இருக்கவே செய்யும், மேலும் உங்களுக்குப் பிடித்த செய்திகளை நீங்கள் ஒரு பொத்தானை தட்டுவதன் மூலமே நேரடியாக OneNote -இல் சேமித்துக்கொள்ள முடியும்.
Nextgen Reader
Windows Phone -க்கான ஒரு வேகமான, சுத்தமான மற்றும் அழகான RSS ரீடர். இப்போது கட்டுரைகளை நேரடியாக OneNote -இல் சேமிக்க உங்களை அனுமதிக்கிறது. வாசிப்பை அனுபவியுங்கள்!
Office Lens
Office Lens இருந்தால் உங்கள் சட்டைப் பையிலேயே ஸ்கேனர் இருப்பதற்கு சமம். வெண்பலகை அல்லது கரும்பலகை எதிலும் எப்போதும் குறிப்புகளை விட்டுவிடாதீர்கள், அதுமட்டுமில்லை, இனி எப்போதும் ஆவணங்கள் அல்லது வணிக அட்டைகள், காணாமல் போன ரசீதுகள் அல்லது ஒட்டுக் குறிப்புகள் எதையும் தேடிக்கொண்டிருக்க வேண்டாம்! Office Lens மாயாஜாலமாய் உங்கள் படங்களை வாசிக்கக் கூடியவையாகவும் மீண்டும் பயன்படுத்தக் கூடியவையாகவும் மாற்றுகிறது. தானியக்க செதுக்குதல் மற்றும் சுத்தப்படுத்தல் மூலம் உள்ளடக்கத்தை நேரடியாக OneNote -இல் சேமிக்கலாம்.
OneNote For AutoCAD
OneNote for AutoCAD ஆனது AutoCAD-இலிருந்து உங்கள் வரைதலுடன் சேர்த்து குறிப்புகளை எடுக்கவும் உங்களை அனுமதிக்கும். இது 2D மற்றும் 3D வரைதல்களை உருவாக்க AutoCAD-ஐப் பயன்படுத்தி உலகெங்கும் கட்டடக்கலைஞரினதும் பொறியியல் நிபுணர்களினதும் உற்பத்தித்திறனைப் பெருக்குகிறது. இந்தக் குறிப்புகள் கிளவுடில் மறுபிரதி எடுக்கப்படுகின்றன, இவற்றை எந்த நேரத்திலும் அணுகலாம். பயனர்கள் AutoCAD-இல் வரைதலைத் திறக்கின்ற அடுத்தமுறை இந்தக் குறிப்புகளைப் பார்க்கலாம்.
OneNote Class Notebooks
ஒவ்வொரு மாணவருக்குமான தனிப்பட்ட பணியிடம், கைப்பிரதிகளுக்கான உள்ளடக்க நூலகம் மற்றும் பாடங்கள் மற்றும் ஆக்கபூர்வச் செயல்பாடுகளுக்கான கூட்டாகச் செயற்படும் இடம் ஆகியவற்றைக் கொண்டு உங்கள் பாடத் திட்டங்களையும் பாடத்திட்ட உள்ளடக்கத்தையும் உங்கள் சொந்த டிஜிட்டல் குறிப்பேட்டில் ஒழுங்குபடுத்தவும்.
OneNote Web Clipper
OneNote Web Clipper ஆனது உங்கள் உலாவியிலிருந்து உங்கள் OneNote குறிப்பேடுகளுக்குள் வலைப்பக்கங்களைச் சேமிக்க உதவுகிறது. வெறும் ஒரு கிளிக்கில், இது விஷயங்களை விரைவாகப் பிடித்து, உங்கள் வாழ்வில் அதிகம் நினைவில் வைத்திருக்க உதவுகிறது.
Powerbot for Gmail
Gmail இடைமுகத்தில் இருந்து முக்கியமான மின்னஞ்சல்கள், உரையாடல்கள் மற்றும் இணைப்புகளை நேரடியாக OneNote-இல் சேமிக்கலாம். வேறு வேறு பயன்பாடுகளுக்கு முன்னும் பின்னுமாக மாற வேண்டிய அவசியம் இனி இல்லை.
WordPress
உங்கள் WordPress இடுகைகளை OneNote இல் எந்த சாதனத்திலும், குறுக்கு தளத்திலும், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் உருவாக்கலாம் மற்றும் எளிமையாக உங்கள் ஏற்கனவே உள்ள குறிப்புகளிலிருந்து உள்ளடக்கத்தை எளிமையாக மீண்டும் பயன்படுத்தலாம்.
Zapier
Zapier என்பது நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தும் Salesforce, Trello, Basecamp, Wufoo மற்றும் Twitter போன்ற பயன்பாடுகளுடன் OneNote -ஐ இணைப்பதற்கான மிக எளிய வழியாகும். இந்த பயன்பாட்டை குறிப்புகளை மறுபிரதி எடுக்க, முடித்த பணிகளைப் பற்றிய தகவலைப் பதிவு செய்து வைக்க அல்லது புதிய தொடர்புகள், புகைப்படங்கள், வலைப் பக்கங்கள் மற்றும் பலவற்றைச் சேமிக்க பயன்படுத்துக.